கோஜி பெர்ரி பழம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் கொஜி பெர்ரி பழம் உட்கொள்வதால் கிடக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
எடை இழப்புக்கு
கோஜி பெர்ரிகள் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதை உட்கொள்வது ஒருவரை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கவும் எடையைக் குறைக்கவும் உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
இது வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இந்த பெர்ரி வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது
இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்த
கோஜி பெர்ரிகள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்
இதய ஆரோக்கியத்திற்கு
கோஜி பெர்ரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை ஒழுங்குபடுத்துகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது
பார்வை ஆரோக்கியத்திற்கு
ஜியாக்சாந்தின் மூலம், கோஜி பெர்ரிகள் கண்களை தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. இதன் மூலம் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்
ஆற்றலை மேம்படுத்த
கோஜி பெர்ரிகள் சாப்பிடுவது உடலில் சகிப்புத்தன்மையைக் கொடுத்து சோர்வைக் குறைக்கிறது. இது உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது
சரும ஆரோக்கியத்திற்கு
கோஜி பெர்ரியில் வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் இவை சருமத்தை மேம்படுத்தவும், சுருக்கங்களைக் குறைத்து பளபளப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது