காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாப்பிடுவதன் தீமைகள்!!

By Devaki Jeganathan
28 Oct 2024, 11:53 IST

இஞ்சி டீ மற்றும் உணவின் சுவையை இரட்டிப்பாக்குகிறது. அதே நேரத்தில், உடல் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற மக்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால், நீங்கள் வெறும் வயிற்றில் இஞ்சியை உட்கொண்டால் ஏற்படும் தீமைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

குறைந்த இரத்த அழுத்தம்

வெறும் வயிற்றில் அதிக இஞ்சியை உட்கொள்வது குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். இது இரத்தத்தை மெல்லியதாக்குகிறது. இந்நிலையில், இஞ்சி சாப்பிடுவது உங்கள் இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கும்.

அசிடிட்டி பிரச்சனை

வெறும் வயிற்றில் இஞ்சியை உட்கொண்டால், அது அமிலத்தன்மையை உண்டாக்கும். இந்நிலையில், உங்களுக்கு அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சினைகள் இருக்கலாம்.

மாதவிடாய் பிரச்சனை

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வெறும் வயிற்றில் அதிக இஞ்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனை, உட்கொள்வதால் மாதவிடாய் காலத்தில் இயல்பை விட அதிக இரத்தப்போக்கு ஏற்படலாம்.

நெஞ்செரிச்சல்

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சியை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இது தவிர, சிலருக்கு இதனால் மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படுகிறது.

வயிற்றுப்போக்கு

இஞ்சி செரிமானத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், வெறும் வயிற்றில் இதை அதிகமாக சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படலாம்.

அதிக எடை இழப்பு

எடை இழப்புக்கு காலையில் வெறும் வயிற்றில் இஞ்சியை சாப்பிட்டால், அதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இதைச் செய்வதன் மூலம், உங்கள் எடை விரைவாகக் குறையும். இதனால், உடல் பிரச்சினைகள் ஏற்படும் என்ற பயம் உள்ளது.

வாயில் எரியும் உணர்வு

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சியை சாப்பிட்டால் வாயில் எரியும் உணர்வு ஏற்படும். இதில், உள்ள கேப்சைசின் என்ற தனிமம் ஒரு நபரின் வாயில் எரியும் உணர்வை ஏற்படுத்தும்.