இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சி மூலப்பொருளாக திகழ்கிறது. இதனை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
ஜீரண சக்தியை மேம்படுத்தும்
தினமும் உணவுக்கு முன்பு சிறிதளவு இஞ்சியை உப்பு சேர்த்து சாப்பிட்டால் உமிழ்நீர் சுரக்க உதவும். இது ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
குமட்டலை நிறுத்துகிறது
குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு இஞ்சி சிறந்த மருந்தாக திகழ்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலை நேர உபாதையை போக்க இஞ்சி உதவுகிறது.
கீழ்வாதத்தை நீக்குகிறது
இஞ்சியில் ஜிஞ்சரால் எனும் பொருள் உள்ளது. இது மூட்டு மற்றும் தசை வலிக்கு நிவாரணமாக உள்ளது. ஆஸ்டியோஆர்திரிட்டிஸ் மூட்டு பிரச்சனை உள்ளவர்களிடம் ஆராய்ந்து பார்த்ததில், இது சிறந்த முடிவுகளை கொடுத்துள்ளது.
எடை இழப்புக்கு வழி வகுக்கும்
எடை குறைப்பதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக உள்ளவர்களின் இடுப்பு பகுதியை குறைப்பது சவாலான ஒன்று. இதற்கு இஞ்சி உதவுகிறது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
இஞ்சில் உள்ள ஜிஞ்சரால், இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதில் சிறந்த பங்கு வகிக்கிறது. இஞ்சி கார்போஹைட்ரேட்டுகளை உடைக்கும் என்சைம்களைக் குறைக்கிறது. இது குளுக்கோஸ் உங்கள் உடல் முழுவதும் பரவுவதை உறுதி செய்வதற்கும் உங்கள் இரத்த ஓட்டத்தில் சேராமல் இருப்பதற்கும் உதவுகிறது.
கொலஸ்ட்ராலை குறைக்கிறது
தினமும் இஞ்சி சாப்பிடுவதால் ட்ரைகிளிசரைடுகள், மொத்த கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்புன் அளவுகளை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.