நைட்ல தயிர் சாப்பிடுபவர்களா நீங்கள்? முதல்ல இத பாருங்க

By Gowthami Subramani
20 May 2024, 17:30 IST

இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இதில் இரவில் ஏன் தயிர் சாப்பிடக் கூடாது என்பதற்கான காரணங்களைக் காணலாம்

உடல் எடை அதிகரிப்பு

தயிரில் அதிகளவிலான கலோரிகள் நிறைந்துள்ளது. இதை இரவில் எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது

சளி அதிகரிப்பு

தயிரை இரவு நேரத்தில் உண்பது சளி உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் இது மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்

செரிமான பிரச்சனை

தயிரை உட்கொள்வது செரிமானத்தைப் பாதிக்கலாம். குறிப்பாக, இரவில் வளர்ச்சிதை மாற்றம் மெதுவாக இருக்கும். இவை செரிமான ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்

ஒவ்வாமை பிரச்சனை

சிலர் பால் ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் சகிப்புத்தன்மையைக் கொண்டிருப்பர். அதிலும் முகப்பரு, அரிக்கும் தோலழற்சி, தடிப்புத் தோலழற்சி உள்ளவர்களுக்கு நிலைகளை மோசமாக்கலாம்.

காய்ச்சல்

இரவு நேரத்தில் தயிர் உண்பது காய்ச்சலை ஏற்படுத்தலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு இரவில் தயிர் உணவு அளிப்பது காய்ச்சலை உண்டாக்குகிறது

அசிடிட்டி

தயிர் இயற்கையிலேயே அமிலத்தன்மை கொண்டதாகும். இது வயிற்றில் உள்ள அமிலத்தன்மை அளவை அதிகரிக்கலாம்

மூட்டு வலிக்கு

தயிரை உட்கொள்வது மூட்டு வலியை மோசமாக்கலாம். அதிலும் குறிப்பாக கீல்வாத நோய்களுக்கு மூட்டு வலி அதிகமாக ஏற்படுகிறது

வீக்கத்தை உண்டாக்க

தயிரை உட்கொள்வது உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்

இந்த காரணங்களுக்காக, இரவில் தயிரை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது