தானிய வகையான சோளம் பல்வேறு ஆரோக்கியமான மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது ஒரு எளிய கார்போஹைட்ரேட்டாகவும் கருதப்பட்டாலும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதில் சோளம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
எடை மேலாண்மைக்கு
சோளம் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இது நீண்ட நேரம் முழுமையாக வைக்க உதவுகிறது. இது எடையை நிர்வகிக்க விரும்புவோர்க்கு சிறந்த தேர்வாகும்
இதய ஆரோக்கியத்திற்கு
சோளத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கூடுதலாக இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
சோளத்தில் உள்ள அதிக வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இது நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும் உதவுகிறது. இது நாள்பட்ட நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
ஆற்றலைத் தர
சோளம் கார்போஹைட்ரேட்டுகளுடன் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் ஒரு ஆரோக்கியமான தானியமாகும். பொதுவாக கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியதாகும். இது சுறுறுப்பாக வைக்க உதவுகிறது
கண் ஆரோக்கியத்திற்கு
சோளத்தில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டுகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது கண் புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
சோளத்தில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் பழுதுபார்க்க அவசியமான புரதமாகும். இவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைத்து இளமையான சருமத்தை ஊக்குவிக்கிறது