தினமும் 1 பீட்ரூட் சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

By Devaki Jeganathan
07 May 2024, 16:30 IST

பீட்ரூட் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என நாம் அனைவருக்கும் தெரியும். பீட்ரூட் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதில் பல்வேறு சத்துக்கள் உள்ளது. தினமும் 1 பீட்ரூட் சாப்பிட்டு வந்தால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

சத்துக்கள் நிறைந்தது

பீட்ரூட்டில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பல சத்துக்கள் பீட்ரூட்டில் உள்ளது. இதன் நுகர்வு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இரத்த சோகை நீக்கும்

இரத்த சோகை பெண்களுக்கு மிகவும் பொதுவானது. இந்நிலையில், பீட்ரூட் நுகர்வு நன்மை பயக்கும். பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலில் இரத்தத்தை அதிகரிக்க பயனுள்ளதாக கருதப்படுகிறது.

இதய ஆரோக்கியம்

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் இதில் உள்ள பியூட்டேன் இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. எனவே, தினமும் 1 பீட்ரூட் சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

சிறந்த செரிமானம்

பீட்ரூட்டில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. 1 பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாயு, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

சோர்வு நீங்கும்

நீங்கள் எப்போதும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தால், தினமும் 1 பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பீட்ரூட்டில் கார்போஹைட்ரேட் உள்ளது, இது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.

தோலுக்கு நல்லது

பீட்ரூட்டில் உள்ள ஃபோலேட் மற்றும் ஃபைபர் சருமத்திற்கு நன்மை பயக்கும். இதனை உட்கொள்வதால் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாறும். இது தவிர, இது முகப்பரு மற்றும் புள்ளிகளை குறைக்கிறது.

மூளை ஆரோக்கியம்

பீட்ரூட் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவியாக கருதப்படுகிறது. இதில், உள்ள கோலின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் மூளையை கூர்மைப்படுத்த விரும்பினால், பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இரத்த அழுத்தம்

பீட்ரூட்டில் நைட்ரேட் உள்ளது, இது உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகிறது. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.