சாப்பிட்ட உடனேயே தண்ணீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைக் காண்போம்
செரிமானத்தை மெதுவாக்குதல்
சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது வயிற்றில் உள்ள செரிமான நொதிகள் மற்றும் இரைப்பை சாறுகளை நீர்த்துப்போகச் செய்கிறது. இந்த நீர்த்தலின் காரணமாக செரிமானத்தை மெதுவாக்கலாம்
இன்சுலின் அளவு அதிகரிப்பு
உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிப்பது, வழக்கத்தை விட இன்சுலின் அளவை அதிகரிக்கலாம். இதற்குக் காரணம் குடலுக்குள் உணவு விரைவாக நகர்வதே ஆகும். இது இன்சுலின் பதிலை அதிகரிக்கத் தூண்டுகிறது
அதிகரித்த கலோரி உட்கொள்ளல்
சில சமயங்களில் உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உடலில் சிக்னல்களில் குழப்பத்தை ஏற்படுத்தி தேவையானதை விட அதிக கலோரிகள் உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும்
ஊட்டச்சத்து உறிஞ்சுதல் பாதிப்பு
செரிமான சாறுகளை நீர்த்துப்போகச் செய்யவதால் ஊட்டச்சத்து முறிவு மற்றும் உறிஞ்சுதலின் செயல்திறன் குறையலாம். அதாவது உண்ணும் உணவில் இருந்து உடல் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் பெற முடியாத நிலை ஏற்படும்
வீக்கம்
சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில், இதில் சேர்க்கப்பட்ட திரவம் வயிற்றின் அளவை அதிகரிக்கிறது. இதனால் அதிகமாக நிரம்பியதாகவும், வீங்கியதாகவும் உணரலாம்
ஆசிட் ரிஃப்ளக்ஸ்
உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிப்பது, வயிற்றில் உள்ள உள்ளடக்கத்தின் அளவை அதிகரிக்கலாம். இது நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். மேலும் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் பொதுவான பிரச்சனையாக அமைகிறது
மோசமான உணவுப் பழக்கம்
உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உணவை முழுமையாக மெல்லாமல் இருப்பது அல்லது மிக விரைவாக சாப்பிடுவது போன்ற மோசமான உணவுப்பழக்கங்கள் ஏற்படலாம். எனவே மெதுவாக சாப்பிடுவது மற்றும் சரியான மெல்லுதல் போன்றவற்றின் மூலம் நல்ல செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு அவசியமாகிறது