காபி குடிப்பது உடலுக்கு சில நன்மைகளைத் தந்தாலும், அதை அதிகளவு எடுத்துக் கொள்வது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் அதிகளவு காபி அருந்துவதால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்
உயர் இரத்த அழுத்தம்
அதிகளவு காஃபின் உட்கொள்வதால், நரம்பு மண்டல தூண்டுதலின் விளைவாக இரத்த அழுத்த அதிகரிப்பை ஏற்படுத்தலாம். இந்த உயர் இரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல்வேறு இதய பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு
வயிற்றுப்போக்கு
காபியில் உள்ள காஃபின் மலச்சிக்கல் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. ஆனால், இதை அதிகளவு உட்கொள்வது வயிற்றுப்போக்கு தொடர்பான பிரச்சனையை அதிகரிக்கலாம்
சதை பிடிப்பு
அதிகம் காஃபின் உட்கொள்வது சதை பிடிப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனால் இரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இன்னும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு
வாந்தி, குமட்டல்
அளவுக்கு அதிகமாக காஃபியை எடுத்துக் கொள்வதால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது
அதிகரித்த இதயத்துடிப்பு
அதிகளவு காஃபின் உட்கொள்வதால் இதயத்துடிப்பு அதிகரிக்கலாம். எனினும், இது அனைவருக்கும் ஏற்படாது. இதய பாதிப்பு உள்ளவர்களே இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர்
சோர்வு
காபி மற்றும் பிற காஃபின் போன்ற உணவுப் பொருள்களை அதிகம் உட்கொள்வது உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கலாம். எனினும் அளவுக்கு அதிகமாக இதை உட்கொள்வது மறைமுகமாக உடல் சோர்வுக்கு வழிவகுக்கலாம்
தூக்கமின்மை
காபி அருந்துவது புத்துணர்ச்சி மிக்க பானமாக இருப்பினும், அதிகளவு உட்கொள்வது தூக்கமின்மை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது