ஓக்ரா தண்ணீரில் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்ப்பது கூடுதல் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் ஓக்ரா, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
எடை இழப்புக்கு
ஓக்ரா வாட்டரில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது வயிறு நிரம்பிய உணவைத் தருவதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது
நல்ல செரிமானத்திற்கு
வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இதில் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்ப்பது வயிற்றுப் பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது
இரத்த சர்க்கரையை சீராக வைக்க
ஓக்ரா நீரில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் உதவுகிறது
மாதவிடாய் வலி நிவாரணத்திற்கு
கிராம்பு, இலவங்கப்பட்டை சேர்க்கப்பட்ட ஓக்ரா தண்ணீர் அருந்துவது மாதவிடாயின் போது ஏற்படும் வலி மற்றும் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் தருகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
ஓக்ரா, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை தண்ணீரில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது
கண்களின் ஆரோக்கியத்திற்கு
வெண்டைக்காயில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவையாகும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
ஓக்ரா, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை போன்றவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது நோய்த்தொற்றுக்கள் மற்றும் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடுகிறது