இஞ்சி டீ குடிப்பது நல்லது தான்.. ஆனா தினமும் குடிச்சா இந்த பிரச்சனை கன்ஃபார்ம்

By Gowthami Subramani
30 Jun 2025, 19:53 IST

இன்று பெரும்பாலானோர் குடிக்கக்கூடிய பானங்களில் ஒன்றாக இஞ்சி டீயும் அடங்கும். இது பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். எனினும் இதை அளவுக்கு அதிகமாக குடிப்பது சில பக்க விளைவுகளை உண்டாக்கலாம்

இரத்த அழுத்த பிரச்சனை

உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் இஞ்சி டீயை முற்றிலும் தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில், இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து படபடப்பை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகலாம்

இரத்த சர்க்கரை அளவு

இஞ்சி டீயை அதிகம் குடிப்பது இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் இஞ்சி டீ குடிப்பதால் கூடுதல் பிரச்சனைகளைச் சந்திக்கக் கூடும்

நெஞ்செரிச்சல்

அதிகளவு இஞ்சி டீ குடிப்பது அடிக்கடி நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும்

வயிற்றுப்போக்கு

தினந்தோறும் இஞ்சி டீயைக் கொடுப்பதால் சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த வகையில் இஞ்சி டீ குடிப்பது எரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்

கர்ப்பிணிகளுக்கு

கர்ப்பிணி பெண்கள் தினந்தோறும் இஞ்சி டீ குடிப்பது குமட்டல், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது

தூக்கமின்மை

அதிகளவு இஞ்சி டீ அருந்துவது தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடும். மேலும் இது மன அமைதியற்ற நிலையை ஏற்படுத்துகிறது