சியா விதைகள் ஆரோக்கியமானவை. ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்வது ஆபத்து. சியா விதைகளை அதிகம் சாப்பிடுவதன் பக்க விளைவுகள் இங்கே.
குடல் பிரச்னை
சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை அதிகமாக உட்கொள்வதால் குடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்.
ஒவ்வாமை எதிர்வினை
சியா விதைகளை அதிகமாக உட்கொள்வது வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வாயில் புண் போன்றவற்றை ஏற்படுத்தும்.
புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும்
சியா விதைகளில் ஆல்பாலினோலெனிக் அமிலம் (ALA) எனப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. ALA ஐ அதிகமாக உட்கொள்வது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
இரத்தத்தை மெலிக்கும்
சியா விதைகளில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உட்கொண்டால் இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும்.
குறைந்த இரத்த அழுத்தம்
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கலோரிகள் அதிகம்
சியா விதைகளில் அதிக கலோரி மற்றும் கொழுப்பு உள்ளது. அதிக சியா விதைகளை சாப்பிடுவது உங்கள் தினசரி கலோரி வரம்பை மீறும்.