ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

By Devaki Jeganathan
22 Jan 2024, 12:39 IST

யாருக்குத்தான் இனிப்பு பிடிக்காது. இருப்பினும், இனிப்புகளை அதிகமாக உட்கொள்வது உடலில் பல நோய்களை ஏற்படுத்தும். எனவே, சர்க்கரை உட்கொள்ளலை குறைக்க வேண்டும். சர்க்கரையை மாதக்கணக்கில் உட்கொள்ளாமல் இருந்தால், அது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

எடை குறையும்

சர்க்கரை உட்கொள்ளாமல் இருப்பதன் மூலம் எடையை குறைக்கலாம். ஏனெனில், அதிகப்படியான சர்க்கரை கலோரிகளின் அளவை அதிகரிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.

இதய ஆரோக்கியம்

சர்க்கரையைத் தவிர்ப்பது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இனிப்புகளை அதிகமாக உட்கொள்வது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அபாயத்தை அதிகரிக்கும்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

உணவில் சர்க்கரையை சேர்க்காமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும். இது சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.

சருமத்திற்கு நல்லது

சர்க்கரையை உட்கொள்ளாமல் இருப்பது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது முகப்பரு மற்றும் பிற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

பற்களுக்கு நல்லது

சர்க்கரை சாப்பிடாமல் இருப்பதன் மூலம் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரையை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பற்களில் மஞ்சள் நிறம் மற்றும் குழி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஆரோக்கியமான உணவு

உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதன் காரணமாக, மீண்டும் மீண்டும் சாப்பிட ஆசை இல்லை.

அதிக சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

நீங்கள் அதிக சர்க்கரை சாப்பிட்டால், கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சர்க்கரையை கைவிடுவது கல்லீரலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் ஆக்குகிறது.