தினமும் துளசி இலை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

By Gowthami Subramani
06 Nov 2024, 19:30 IST

தினமும் துளசி இலை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் தினமும் துளசி இலை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

எடை இழப்பு

துளசியானது குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுவதால் துரிதமான எடையிழப்புக்கு உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

துளசி இலைகள் செரிமான அமைப்பைத் தணித்து, வீக்கம் மற்றும் அஜீரணத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

சுவாச ஆரோக்கியம்

துளசி உட்கொள்வதன் மூலம் சளி, இருமல் மற்றும் பிற சுவாசக் கோளாறு பிரச்சனைகளைக் குறைக்க முடியும்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

இதில் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுக்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் உதவுகிறது

புற்றுநோய் எதிர்ப்பு

துளசியில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட பைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது

துளசி உட்கொள்வதில் இது போன்ற பல்வேறு ஆரோக்கியமான நன்மைகள் இருப்பினும், அதை அதிகமாக உட்கொள்வதால் சில பக்கவிளைவுகளும் ஏற்படலாம். எனவே மிதமான அளவு உட்கொள்வது நல்லது