தினமும் சப்ஜா விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
13 Sep 2024, 08:53 IST

தினமும் சப்ஜா விதைகளை உட்கொள்வது, உட ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனினும், இதை மிதமான அளவில் உட்கொள்வதன் மூலம் பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்

எடை மேலாண்மை

உடல் எடையை குறைக்க இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. இதனை உட்கொள்வது பசியைக் கட்டுப்படுத்துகிறது

செரிமான ஆரோக்கியம்

சப்ஜா விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது மலச்சிக்கல்லைப் போக்கவும், செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த

சப்ஜா விதைகள் உடல் பருமனைத் தடுப்பதன் மூலம், இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது

நீரேற்றம்

சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைக்கும் போது, அது ஜெல் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இது உடலில் நீரேற்றத்தை பராமரிக்க உதவுகிறது

குடல் ஆரோக்கியத்திற்கு

சப்ஜா விதைகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கக்கூடிய ப்ரீபயாடிக் நன்மைகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

எலும்பு, தசை ஆரோக்கியத்திற்கு

சப்ஜா விதைகள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இவை தசை செயல்பாட்டிற்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது

குளிர்ச்சித் தன்மை

இது உடலைக் குளிர்விக்க உதவும் விதையாகும். குறிப்பாக, வெப்பமான காலநிலையில் சப்ஜா விதைகள் மிகவும் பயனுள்ளதாக அமையும்