தினமும் வறுத்த ஆளி விதைகளை சாப்பிடுவதால் என்னாகும் தெரியுமா?

By Gowthami Subramani
26 Feb 2025, 17:11 IST

அன்றாட உணவில் சில விதைகளைச் சேர்ப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் ஆளி விதைகள் கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த சிறந்த விதையாகும். இது சுவையுடன் கூடிய பல நன்மைகளைத் தருகிறது. இதில் வறுத்த ஆளி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

எடையிழப்புக்கு

ஆளி விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள், நீண்ட நேரம் முழுமை உணர்வைத் தருகிறது. இது குறைவாக சாப்பிடவும், இயற்கையாகவே எடை குறைக்கவும் வழிவகுக்கிறது

நீரிழிவு நோய்க்கு

ஆளி விதைகள் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. எனவே ஆளி விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கும், சர்க்கரை உட்கொள்ளலைக் கண்காணிப்பவர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும்

செரிமான ஆரோக்கியத்திற்கு

வறுத்த ஆளி விதைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது குடலை மகிழ்ச்சியாகவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. மேலும் இது உடல் உப்புசம் மற்றும் மலச்சிக்கலிலிருந்து விடுபட வைக்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு

ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது

வீக்கத்தை எதிர்த்துப் போராட

ஆளி விதைகள் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்ததாகும். இது மூட்டு வலி அல்லது நாள்பட வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது

மூளையை கூர்மைப்படுத்த

ஆளி விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் இது நினைவாற்றலை மேம்படுத்துவதுடன், மூளையைக் கூர்மையாக இருக்க உதவுகிறது

சருமம், முடி ஆரோக்கியத்திற்கு

இதில் உள்ள அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது