தினமும் ராகி சாப்பிடுவதால் நிகழும் அற்புதங்கள் இங்கே

By Ishvarya Gurumurthy G
30 Aug 2024, 13:45 IST

உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தானியமான ராகி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இதய நோய் தடுப்பாக

ராகி, உடலில் உள்ள டிரை கிளிசரைடுகளின் செறிவைக் குறைக்கிறது. மேலும், எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும், அதன் ஆக்ஸிஜனேற்றத்தையும் தடுக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

தாதுக்கள் நிறைந்தது

பல்வேறு வகையான தாதுப்பொருள்கள் நிறைந்த தானியங்களில் ராகியும் ஒன்று. இதில் எலும்புகளை வலுவாக்க உதவும் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும், இதில் உள்ள பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மை

ராகியில் நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மைகள் நிறைந்துள்ளன. இவை உணவை கெட்டுப்போகச் செய்யும் பாக்டீரியாவான பேசிலஸ் செரஸ், சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரிஸ் போன்ற பல்வேறு வகையான பாக்டீரியாக்களை எதிர்த்து செயலாற்றுகிறது.

இளமையாக வைத்திருக்கும்

ராகி, வரகு போன்றவை முதுமையைத் தடுக்க உதவும் ஃபினாலிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் கொலாஜன் கிராஸ்-லிங்கிங் என்ற மூலக்கூறு குறுக்கு இணைவைத் தடுக்கும் பிரத்யேக ஆற்றல் உள்ளன.

புற்றுநோயை தடுக்கும்

ராகி ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த சிறந்த தானியமாகும். ராகியின் மேற்புறத் தோலில் உள்ள ஃபினாலிக் அமிலங்கள், ஃபிளவனாய்டுகள் மற்றும் டான்னீஸ் போன்றவை சிறப்பான ஆன்டி ஆக்ஸிடன்ட் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன.

நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவும்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ராகி உதவுகிறது. இதில் கார்போஹைட்ரேடுக்களுடன், அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

புரதச்சத்து

அரிசியுடன் ஒப்பிடுகையில் ராகியின் புரத அளவு அதிகமாக உள்ளது. சிலவகை ராகியின் புரத அளவு, அரிசியை விட இரு மடங்காக இருக்கலாம். முக்கியமாக இந்த புரதம் தனிச்சிறப்பு கொண்டதாகும்.