தினமும் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இதன் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
ஊட்டச்சத்து உள்ளடக்கம்
பப்பாளியில் கரோட்டினாய்டுகள், ஆல்கலாய்டுகள், ஃபிளவனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் பப்பாளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, ஃபோலேட், பொட்டாசியம், மக்னீசியம், தாமிரம் போன்றவை உள்ளது. இதில் வெறும் வயிற்றில் பப்பாளியை உட்கொள்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
செரிமானம் மேம்படும்
உடலில் செரிமான செயல்பாடு குறையும் போது பப்பாளியை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் பப்பாளியில் உள்ள பாப்பேன் போன்ற என்சைம்கள் திறமையாக செயல்பட்டு புரத செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் அஜீரணத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.
ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கும்
பப்பாளியில் காஃபிக் அமிலம், மைரிசெட்டின், வைட்டமின்கள் ஏ, சி, மற்றும் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றங்களின் சக்திவாய்ந்த கலவை நிறைந்துள்ளது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாத்து ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
நச்சுத்தன்மையை வெளியேற்றும்
உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து, பப்பாளியை எடுத்துக் கொள்வது நல்லது. இது உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவுகிறது. பப்பாளியில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் உடலில் இருக்கும் கழிவுகள், நச்சுக்களை அகற்ற உதவுகிறது. மேலும் பப்பாளியின் ஊட்டச்சத்துக்கள் உடல் உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது.
எடை மேலாண்மை
காலையில் வெறும் வயிற்றில் பப்பாளியை உட்கொள்வது நீண்டநேரம் வயிறு நிரம்பிய உணர்வுக்கு பங்களிக்கிறது. இது சரியான உடல் எடையை நிர்ணயிக்கிறது. எனவே எடை மேலாண்மை நன்மைகளை விரும்புவோர்க்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.
சர்க்கரை கட்டுப்பாடு
பப்பாளியில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. ஏனெனில் இது இரத்தத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. மேலும் கிளைசெமிக் குறியீட்டைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கிறது.
வலி நிவாரணம்
பல்வேறு வழிகளில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கிறது. இது தவிர மாதவிடாய் காலத்தில் உடலில் ஏற்படும் வலியைச் சமாளிக்க பப்பாளி சாப்பிடுவது நல்லது.