தினமும் 4 வேப்பிலை போதும்... என்ன ஆகும் தெரியுமா.?

By Ishvarya Gurumurthy G
22 May 2024, 11:32 IST

வேப்பிலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தினமும் இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே காண்போம்.

ஊட்டச்சத்து உள்ளடக்கம்

புரதம், கால்சியம், வைட்டமின் சி, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, அமினோ அமிலங்கள், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், டானிக் அமிலம் போன்ற சத்துக்கள் வேப்பிலையில் காணப்படுகின்றன.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறீர்கள் என்றால், தினமும் 4-5 வேப்ப இலைகளை உட்கொள்ள வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் பல தொற்றுகள் மற்றும் பருவகால நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது.

எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்

வேப்பிலையில் நார்ச்சத்தும் புரதமும் காணப்படுகின்றன. இவை உடலில் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துவதோடு, எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. இதற்கு தினமும் வெறும் வயிற்றில் வேப்பிலைகளை மென்று சாப்பிடலாம்.

செரிமான ஆரோக்கியம்

வேப்பிலையில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமாத்தை மேம்படுத்துகிறது. இதனால் வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது.

வாந்தி மற்றும் குமட்டலில் இருந்து நிவாரணம்

உங்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தி இருந்தால், நீங்கள் வேப்பிலைகளை மென்று சாப்பிடலாம். இதன் மூலம் நீங்கள் நிறைய பயனடைவீர்கள். மேலும், வேப்பிலைகளின் உதவியுடன், நீங்கள் உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கலாம்.

தோலுக்கு நல்லது

வேப்பிலையில் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளது. இதனால் சருமத்திற்கு பல நன்மைகள் உள்ளன. சரும பாதிப்பை தடுக்க வேண்டுமானால் வேப்பிலைகளை சாப்பிடலாம்.

தினமும் வேப்பிலை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இருப்பினும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் நீங்கள் ஏதேனும் மருத்துவ நிலையில் இருந்தால், வேப்பிலை சாப்பிடும் முன் மருத்துவரை அணுகவும்.