உலர் பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது தெரியும். ஆனால், இதை தினமும் உட்கொள்வது நல்லதா என்பதை யோசித்திருக்கிறீர்களா? இதில் தினமும் உலர் பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
எடை நிர்வாகத்திற்கு
சில உலர்பழங்களை உட்கொள்வது நீண்ட நேரம் நிறைவான உணர்வைத் தருகிறது. இது அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
அத்தி, கொடிமுந்திரி போன்ற உலர் பழங்களில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும் இது மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
பாதாம், வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை உடலில் கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது
சீரான இரத்த சர்க்கரைக்கு
பாதாம், பிஸ்தா போன்ற சில உலர் பழங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
உலர்ந்த பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது
ஒளிரும் சருமத்தை ஊக்குவிக்க
இதன் ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சுருக்கங்களைக் குறைக்கவும், இயற்கையான பளபளப்பைக் கொடுக்கவும் உதவுகிறது
மூளை செயல்பாட்டை மேம்படுத்த
வால்நட்ஸ், பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கவனம், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது