தினமும் ஒரு சீதாப்பழம் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் சீதாப்பழம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
சீதாபழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் மற்றும் புரதம் போன்றவை உள்ளது. இதனுடன் வைட்டமின் சி, பி6 மற்றும் பி3 போன்ற வைட்டமின்களும் நிறைந்துள்ளது
எடை மேலாண்மைக்கு
இது குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதற்கும், எடை மேலாண்மைக்கும் உதவுகிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
சீதாப்பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்திற்கு உதவுகிறது. இவை வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த
இதில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த அழுத்தத்தை சீராக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது
அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்
இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை சருமத்தை ஆரோக்கியமாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது. மேலும் இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
மனநிலை மேம்பாட்டிற்கு
சீதாப்பழத்தில் வைட்டமின்கள் பி நிறைந்துள்ளது. இவை மனநிலையை சீராக்கவும், கவலை, மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது