தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை மென்று சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
உடல் எடை இழப்பிற்கு
கறிவேப்பிலை உட்கொள்ளல் பசியைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்க உதவுகிறது. இவ்வாறு உடல் இழப்பு முயற்சிகளை ஆதரிக்கிறது
இதய ஆரோக்கியத்திற்கு
கறிவேப்பிலையில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது
செரிமானத்தை மேம்படுத்த
கறிவேப்பிலையில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது
இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
முடி ஆரோக்கியத்திற்கு
கறிவேப்பிலையில் வைட்டமின்கள் பி, சி மற்றும் ஈ போன்றவை உள்ளது. மேலும் இதில் உள்ள புரதம், பீட்டா கரோட்டின் போன்றவை முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
மன அழுத்தத்திற்கு
கறிவேப்பிலையில் உள்ள நறுமணம் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் மனதை அமைதிப்படுத்தி, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.