கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், ஆக்ஸிஜனேற்றிகள், இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளது.
தினந்தோறும் 5-10 கறிவேப்பிலையைத் தொடர்ந்து உட்கொள்வது உடலுக்குப் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
மூளையின் நரம்பு மண்டலத்தை பாதுகாப்பாக வைப்பதுடன் அல்சைமர் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.
செரிமான அமைப்பை மேம்படுத்த உதவும். இதில் நார்ச்சத்துக்கள் அதிகம், மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்கும்.
உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.