தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு சில நன்மைகளைத் தந்தாலும், பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதில் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் காணலாம்
உடல் எடை அதிகரிப்பு
தயிர் மற்றும் சர்க்கரை கலந்த கலவையில் அதிக கலோரிகள் இருப்பதால், இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்
நீரிழிவு நோய்
சர்க்கரையை தினந்தோறும் எடுத்துக் கொள்வதால் நீரிழிவு நோயை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, தயிரில் அதிகளவு சர்க்கரையை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இது நீரிழிவு நோயை ஏற்படுத்தலாம்
பற்களில் பிரச்சனை
தயிரில் புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. எனினும், இதை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடும் போது பற்களின் சிதைவுக்கு வழிவகுக்கலாம். இது பல் பற்சிப்பியை அரித்து, துவாரங்களை ஏற்படுத்தக்கூடும்
வயிற்றுப்போக்கு பிரச்சனை
தயிருடன் சர்க்கரையை அதிகம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் குடல் நுண்ணுயிரியியலில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தலாம். இது செரிமான செயல்முறையை சீர்குலைத்து வயிற்றுப்போக்கு பிரச்சனையை உண்டாக்கக் கூடும்