தினமும் 1 ஸ்பூன் ஓமம் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?

By Devaki Jeganathan
29 Mar 2024, 10:26 IST

சிறு வயதில் இருந்தே வயிறு தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஓமம் கொடுப்பார்கள். இதை விதை, பொடி, தண்ணீர் என பல வடிவங்களில் நாம் சாப்பிட்டிருப்போம். இது பல்வேறு உடல் நல பிரச்சினைகளை தீர்க்கும் தன்மை கொண்டது. இதை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

ஓமம் சாப்பிடும் முறை

கடாயில் சிறிது நேரம் ஓமத்தை வறுத்து, மிக்சியில் அரைக்கவும். இப்போது அதன் தூளை ஒரு கண்ணாடி கொள்கலனில் சேமித்து வைக்கவும். பின்னர், தினமும் தூங்கும் முன் 1 தேக்கரண்டி ஓமம் பொடியை வெதுவெதுப்பான நீரில் சாப்பிடுங்கள்.

செரிமானத்தை மேம்படுத்தும்

ஓமத்தில் உள்ள பண்புகள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனை தினமும் உட்கொள்வதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை, வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வாய் துர்நாற்றம்

ஓமம் வாய்வழி சுகாதாரத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை தினமும் உட்கொள்வதால் வாய் துர்நாற்றம் பிரச்சனையும் நீங்கும்.

இரத்த சர்க்கரை அளவு

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஓமத்தை எடுத்துக் கொண்டால், இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும். இந்நிலையில், இது நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இதய ஆரோக்கியம்

வெந்நீருடன் ஓமம் எடுத்துக்கொள்வது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது. இதன் காரணமாக இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

எடை இழக்க

தினமும் வெந்நீருடன் ஓமம் சேர்த்து குடிப்பது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இது எடை இழப்புக்கு உதவுகிறது.

கூடுதல் குறிப்பு

உங்களுக்கு ஏற்கனவே வயிற்றுப் பிடிப்பு, அல்சர், எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகள் இருந்தால், ஓமம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இதனால் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.