தினமும் பீட்ரூட் சாறு குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?

By Gowthami Subramani
29 Apr 2024, 13:30 IST

பீட்ரூட் சாறு உணவில் சேர்க்கக்கூடிய சிறந்த பானங்களில் ஒன்றாகும். இதில் பீட்ரூட் சாறு அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

பீட்ரூட்டில் தாமிரம், ஃபோலேட் மற்றும் மாங்கனீஸ் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்

இரத்த அழுத்த அளவை குறைக்க

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பின் பீட்ரூட் சாறு அருந்தலாம். இந்த சாற்றில் அதிகளவு நைட்ரிக் ஆக்ஸைடு உள்ளது. இந்த சாற்றைத் தொடர்ந்து அருந்துவது இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

வீக்கத்தைக் குறைக்க

இந்த சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது வீக்கத்தை உண்டாக்கும் உடலில் ஏற்படும் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது

அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை ஊக்குவித்து மூளை செயல்பாட்ட மேம்படுத்துகிறது. இது மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வறண்ட சருமம் உடையவர்கள் பீட்ரூட் சாற்றை எடுத்துக் கொள்ளலாம்

செரிமான ஆரோக்கியத்தை

பீட்ரூட்டில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மலச்சிக்கல் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது. எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட் சாற்றை எடுத்துக் கொள்ளலாம்