1 மாதத்திற்கு சர்க்கரையைத் தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
18 Jul 2024, 09:00 IST

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சர்க்கரை உடல் ஆரோக்கியத்திற்கு சிறிதும் நல்லதல்ல. இதனை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தைப் பல வழிகளில் பாதிக்கும். தொடர்ந்து 1 மாதத்திற்கு சர்க்கரை தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

எடை இழப்பு

உடல் எடை அதிகரிப்பின் முக்கிய காரணியாக விளங்குவது சர்க்கரை உட்கொள்ளல் ஆகும். எனவே சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது அல்லது ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாமல் இருப்பது உடல் எடையிழப்புக்கு வழிவகுக்கும்

பல் ஆரோக்கியம்

சர்க்கரையைத் தவிர்ப்பது வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது பற்களின் துவாரங்கள் மற்றும் ஈறு நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

மேம்படுத்தப்பட்ட இரத்த சர்க்கரை அளவு

30 நாள்களுக்கு சர்க்கரையை சாப்பிடாமல் இருப்பது, இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது. இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது

மேம்படுத்தப்பட்ட ஆற்றல் நிலைகள்

இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகமல் இருக்கும் போது உடலில் ஆற்றல் அளவு சமநிலையில் இருக்கும். நாள் முழுவதும் தேவையான ஆற்றலைத் தருகிறது

தெளிவான சருமத்திற்கு

அதிக சர்க்கரை உட்கொள்வது முகப்பரு மற்றும் வேறு சில சரும பிரச்சனைகள் ஏற்படலாம். சர்க்கரை உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தில் முன்னேற்றங்களைப் பெறலாம்

குடல் ஆரோக்கியத்திற்கு

சர்க்கரை உட்கொள்வதால் குடல் பாக்டீரியாவின் சமநிலை சீர்குலைக்கலாம். சர்க்கரையைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

மேம்படுத்தப்பட்ட மனநிலை

நிலையான இரத்த சர்க்கரை அளவுகள் மனநிலையை சாதகமாக பாதிக்கலாம். எனவே சர்க்கரையைக் குறைப்பதன் மூலம் மனநிலை மாற்றங்களைக் குறைத்து, தெளிவான மனநிலையை உண்டாக்கும்