நம்மில் பலர் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுவோம். இன்னும் சிலர் பசிக்கும் போதெல்லாம் வாழைப்பழம் சாப்பிடுவார்கள். தினமும் அளவுக்கு அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவைத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
மலச்சிக்கல் அபாயம்
வாழைப்பழத்தில் டானிக் அமிலம் உள்ளது. இது அதிக அளவில் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
தூக்கம்
வாழைப்பழத்தில் டிரிப்டோபான், அமினோ அமிலம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தும்.
வாயுத்தொல்லை
வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பிரக்டோஸ் உள்ளது. இது பெரிய அளவில் ஜீரணிக்க கடினமாக இருக்கும் மற்றும் வாயுவை ஏற்படுத்தும்.
ஹைபர்கேலீமியா
அதிக பொட்டாசியம் சாப்பிடுவது ஹைபர்கேமியாவை ஏற்படுத்தும்.
வயிற்று வலி
வாழைப்பழத்தில் பிரக்டோஸ், சர்பிடால் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இரைப்பை குடல் பிரச்சினைகளைத் தூண்டும்.
ஒவ்வாமை
வாழைப்பழங்கள் பழுக்க வைக்கும்போது அவற்றின் ஒவ்வாமை விளைவுகள் அதிகரிக்கும். அறிகுறிகள் அரிப்பு, வாயு, அஜீரணம், பிடிப்புகள், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் பல.
பல் சொத்தை
வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது, இது பல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சுவாச பிரச்சனைகள்
வாழைப்பழங்கள் உங்கள் வாய் மற்றும் தொண்டையில் சளி உற்பத்தியை அதிகரிக்கும். இது சுவாச பிரச்சனைகள் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறலை மோசமாக்கும்.