பூசணி ஜூஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பூசணிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதன் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சத்துக்கள் நிறைந்தது
நார்ச்சத்து, இரும்பு, சோடியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் பூசணி ஜூஸில் காணப்படுகின்றன.
மலச்சிக்கல்
பூசணிக்காய் ஜூஸ் குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும், வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
பூசணி ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில், உள்ள இம்யூனோமோடூலேட்டரி பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆரோக்கியமான சருமம்
குளிர்காலத்தில் குளிர்ந்த காற்றினால் சருமம் வறண்டு போகும். இந்நிலையில், பூசணி சாற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முகத்தில் உள்ள வறட்சியை நீக்குகிறது.
நல்ல தூக்கம்
பூசணி சாறு தூக்கமின்மை பிரச்சனையையும் நீக்குகிறது. பூசணிக்காயில் உள்ள டிரிப்டோபான் அமினோ அமிலம் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.