சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் நாம் சாப்பிட வேண்டிய சில பச்சை உணவுகளைக் காணலாம்
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்றவை அதிகளவு உள்ளது. மேலும், இது அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது
கீரை
இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்த கீரை கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது
வெள்ளரிக்காய்
இது அதிக நீர் உள்ளடக்கம் கொண்டதாக அமைகிறது. மேலும் இது குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. இவை எடை மேலாண்மைக்கு சிறந்தவையாகும்
பச்சை ஆப்பிள்கள்
இதில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்துள்ளது. மேலும், பச்சை ஆப்பிள்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
ப்ரோக்கோலி
இது வைட்டமின்கள் சி மற்றும் கே, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது
வெண்ணெய் பழம்
அவகேடோ போன்ற வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை நல்ல கொழுப்பை அதிகரித்து, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது
பச்சை பட்டாணி
பச்சை பட்டாணியில் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்திற்கும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது