உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களை உட்கொள்ளவும். நீங்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் இங்கே.
ஆரஞ்சி
இது வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக திகழ்கிறது. இது கண் சார்ந்த பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.
ஆப்ரிகாட்
ஆப்ரிகாட்டில் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக திகழ்கிறது.
அவகேடோ
லுடீன் மற்றும் ஜியாசாந்தின் நிறைந்த அவகேடோ, மாலை கண் வியாதிக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
பப்பாளி
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பப்பாளி, கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
பெர்ரி
பெர்ரி பழங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், விழித்திரையில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது.