வைட்டமின் ஏ குறைபாட்டிற்கு இந்த உணவுகளை சாப்பிடுங்க

By Gowthami Subramani
18 Aug 2024, 16:07 IST

வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் தோல் புண்கள் போன்றவை ஏற்படலாம். இதில் வைட்டமின் ஏ குறைபாட்டை சரிசெய்ய உதவும் சில உணவுகளைக் காணலாம்

கீரை

1 கப் அளவிலான சமைத்த கீரையில் தினசரி அளவிலான வைட்டமின் ஏ-ல் கிட்டத்தட்ட 100%-ஐ பூர்த்தி செய்கிறது. இதை சாலட் அல்லது சூப் ஆக எடுத்துக் கொள்ளலாம்

முட்டை

முட்டையில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த மூலமாகும். முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ தினசரி தேவையில் 10% உள்ளது

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் 1 கேரட் சாப்பிடுவதன் மூலம் தினசரி வைட்டமின் ஏ தேவையைப் பூர்த்தி செய்கிறது

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது வைட்டமின் ஏ நிறைந்த மூலமாகும்

காலே

இதில் வைட்டமின் ஏ மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை உடலின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது

குடைமிளகாய்

குடைமிளகாய் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இவை கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளது

தக்காளி

இதில் போதுமான அளவு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ இரண்டும் உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், கண்பார்வை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்