எடையை வேகமாக குறைக்க இந்த உணவுகளை தவிர்க்கவும்

By Ishvarya Gurumurthy G
22 Aug 2024, 19:47 IST

இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது பொதுவான பிரச்னையாகிவிட்டது. இதனை தடுக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக உடல் பருமன் ஏற்படுகிறது. இதனை தடுக்க சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் என்னவென்று இங்கே காண்போம்.

பிரெஞ்சு ப்ரைஸ்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக பிரெஞ்ச் ப்ரைஸ் உள்ளது. இது மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவாகும், இதில் கிட்டத்தட்ட நார்ச்சத்து இல்லை. இதில் உள்ள மற்றொரு பிரச்னை அதிகப்படியான எண்ணெய் மற்றும் உப்பு. இது தேவையில்லாத கொழுப்பை அதிகரிக்கிறதோ தவிர, வேறு எந்த வகையிலும் நன்மை தருவதில்லை.

சாக்லெட்

கடைகளில் விற்கப்படும் கலர், கலரான மிட்டாய், சாக்லெட், குக்கீஸ், டோனட்ஸ், கேக்குகள் ஆகியவை நாவிற்கும், கண்களுக்கும் வேண்டுமானால் சுவையான விருந்தாக இருக்கலாம். ஆனால் உடலுக்கு முற்றிலும் தீங்கிளைக்கக்கூடியது. ஏனெனில் அதிலுள்ள அதிக சர்க்கரை, மைதா, ஆயில் ஆகியவை நிறைவுற்ற கொழுப்பு ஆகும். இதனை உட்கொள்வதால் உடலில் கொழுப்பு கூடி எடை அதிகரிக்கிறது.

கூல்ட்ரிங்ஸ்

சுவையூட்டப்பட்ட மற்றும் புத்துணர்ச்சியூட்டும் குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பானங்கள் அதிக சர்க்கரை கொண்டவை. இதில் சத்துக்கள் இல்லை என்பது இன்னொரு உண்மை. இந்த பானங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இதனால் உடல் நலம் கெடும்.

மது

ஆல்கஹால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். நீங்கள் அதிக எடையைக் குறைக்க விரும்பினால் மதுவைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். ஆல்கஹால் அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது மற்றும் பசியின் பசியை துரிதப்படுத்துகிறது.