மறந்தும் இந்த உணவுகளை திரும்ப சூடுபடுத்தாதீங்க

By Gowthami Subramani
14 Jan 2025, 18:54 IST

இன்று பலரும் மீதமுள்ள உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவர். இது பாதிப்பற்றதா தோன்றலாம். ஆனால், சில பொதுவான உணவுகளை சூடுபடுத்துவது தீங்கு விளைவிக்கலாம். இதில் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கக்கூடிய அல்லது மீண்டும் சூடுபடுத்தும்போது நச்சுத்தன்மையுள்ள உணவுகளைக் காணலாம்

அரிசி

முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட சமைத்த அரிசி மீண்டும் சூடுபடுத்தப்படும்போது, அது உயிர்வாழும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கலாம். இது உணவு விஷத்தை ஏற்படுத்தலாம்

கோழி

இதை மீண்டும் சூடுபடுத்தும் போது, அதன் புரத அமைப்பை மாற்றுகிறது. இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்

முட்டை

மீண்டும் சூடுபடுத்தப்பட்ட முட்டைகள் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை வெளியிடலாம். இதனால், அதன் ஊட்டச்சத்து மதிப்பு இழக்கக் கூடும். எனவே இதை குளிராகவோ அல்லது புதியதாகவோ சாப்பிடுவது நல்லது

காளான்

காளான்களை மீண்டும் சூடுபடுத்தும் போது அது புரதச் சிதைவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இது வயிறு வலி அல்லது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும்

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை அறை வெப்பநிலையில் வேகவைக்கப்படுவது பாக்டீரியாவை உருவாக்கலாம். இதை மீண்டும் சூடுபடுத்தும் போது பாக்டீரியா நீக்கப்படாது

தேநீர்

தேநீரை மீண்டும் சூடுபடுத்தும் போது, அது ஆக்ஸிஜனேற்றிகளைக் குறைத்து, அமிலத்தன்மை அல்லது செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தும் டானின்களை வெளியிடுகிறது. எனவே எப்போதும் புதிய காய்ச்சிய தேநீரை அனுபவிக்கலாம்