ஹைப்போ தைராய்டிசம் இருக்கா? மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

By Gowthami Subramani
20 Jan 2025, 21:15 IST

தைராய்டு ஆரோக்கியம்

ஹைப்போ தைராய்டிசத்தை நிர்வகிக்க, மருந்தை விட உணவு முறையே அதிகளவு முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வாறு சில உணவுகளைத் தவிர்ப்பது தைராய்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது

கொழுப்பு உணவுகள்

கொழுப்பு நிறைந்த இறைச்சிகள் மற்றும் முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவை தைராய்டு மருந்து உறிஞ்சுவதைத் தடுக்கிறது. எனவே கொழுப்பு உட்கொள்ளலைக் குறைப்பது, மருந்துகள் சரியாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்து தைராய்டு ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது

காஃபின் கலந்த பானங்கள்

காபி, தேநீர் மற்றும் சில ஆற்றல் பானங்களில் உள்ள காஃபின்கள், தைராய்டு மருந்து உறிஞ்சுவதில் தலையிடலாம். எனவே காஃபினேட் பானங்களைக் குடிக்கும் முன்பாக மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் அல்லது காஃபின் கலந்த பானங்களை முற்றிலும் தவிர்க்கலாம்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

சூப்கள் மற்றும் உறைந்த உணவுகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவு சோடியம் காணப்படும். இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம். பெரும்பாலும், ஹைப்போ தைராய்டிசத்தில் இது ஒரு பிரச்சனையாகக் கருதப்படுகிறது. எனவே குறைந்த சோடியம் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கலாம்

சிலுவை காய்கறிகள்

ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற சிலுவை காய்கறிகள் ஆகியவை தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கான முக்கிய அங்கமான அயோடின் உறிஞ்சுதலைக் குறைக்கிறது. எனவே சிலுவை காய்கறிகள் உட்கொள்வதைக் குறைப்பது நல்லது

சோயா பொருள்கள்

சோயாவில் ஐசோஃப்ளேவோன்கள் உள்ளது. இது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி அல்லது உறிஞ்சுதலைத் தடுக்கலாம். சோயா பொருள்களில் டோஃபு, சோயா பால் மற்றும் சோயா புரதம் போன்றவை அடங்கும். சிறந்த தைராய்டு ஆரோக்கியத்திற்கு அதிகப்படியான உட்கொள்ளலைத் தவிர்க்க வேண்டும்

அதிக அயோடின் நிறைந்த உணவுகள்

கடற்பாசி, அயோடின் கலந்த உப்பு போன்றவற்றிலிருந்து அதிகப்படியான அயோடின் தைராய்டு நிலைமைகளை மோசமாக்கலாம். குறிப்பாக, சீரான தைராய்டு செயல்பாட்டிற்கு அயோடின் உட்கொள்ளலைக் கண்காணிக்க வேண்டும்

சுத்திகரிக்கப்பட்ட இனிப்புகள்

இனிப்புகள், சோடா போன்றவை தைராய்டு சுரப்பு தொடர்பான எடை பிரச்சினைகளை மோசமாக்கலாம். சர்க்கரை நுகர்வைக் குறைப்பதன் மூலம் சிறந்த வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்