மறந்தும் இந்த உணவுகளை ஆரஞ்சு பழத்தோட சாப்பிட்றாதீங்க.

By Gowthami Subramani
06 Dec 2023, 13:03 IST

ஆரஞ்சு பழங்கள் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான பழங்களாகும். ஆனால், சில உணவுகளை ஆரஞ்சுடன் இணைப்பது தவறான கலவையாக மாறலாம். இவை ஒவ்வாமை அல்லது வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

ஊட்டச்சத்துகள்

ஆரஞ்சு பழத்தில் அதிகளவு வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இவை நோயெதிர்ப்புச் சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு சிறந்தாகும். ஆனால், சில உணவுகளுடன் ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்வது அஜீரணம், நெஞ்செரிச்சல், அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்

பால்

ஆரஞ்சு பழத்தில் சிட்ரிக் அமிலம் இருப்பதால், இதை பாலுடன் சேர்த்து உட்கொள்ளக் கூடாது. இவை வயிற்றுக்கோளாறு, வீக்கம் போன்றவற்றை உண்டாக்கலாம்

வாழைப்பழங்கள்

ஆரஞ்சு பழத்துடன் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது செரிமான பிரச்சனையை உண்டாக்கலாம். குறிப்பாக, வயிற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது

பருப்பு வகைகள்

ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மையுடன் பருப்பு வகைகளைச் சேர்த்து எடுத்துக் கொள்வது அஜீரணம் மற்றும் செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்

காஃபின்

பிளாக் டீ அல்லது காஃபியுடன் ஆரஞ்சு பழத்தை உட்கொள்வது உணர்திறன் உள்ளவர்களுக்கு வயிற்றுக் கோளாறை ஏற்படுத்தும். மேலும், இது வயிற்றுப் புண்களை மோசமாக்கும்

மசாலா உணவுகள்

ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மையுடன், காரமான மற்றும் மசாலா உணவுகளை எடுத்துக் கொள்வது செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்றெரிச்சலைத் தூண்டும்