வெள்ளரிகள் லேசான, புத்துணர்ச்சியூட்டும் தன்மை கொண்டதாகும். எனவே தான் சாலட், சாண்ட்விச் என எதுவாக இருந்தாலும் வெள்ளரி இடம் பெறுகிறது. எனினும், இதை சில உணவுகளுடன் சேர்ப்பது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதில் வெள்ளரியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளைக் காணலாம்
தக்காளி
தக்காளி மற்றும் வெள்ளரிகள் வெவ்வேறு செரிமான நேரங்களைக் கொண்டுள்ளதாகும். இதை ஒன்றாகச் சாப்பிடுவது வீக்கம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம்
பால் பொருள்களுடன்
வெள்ளரிகள் குளிர்ச்சியாக இருந்தாலும், தயிர் போன்ற பால் பொருட்கள் கனமானவை மற்றும் வெப்பமடையக்கூடியதாகும். இது வீக்கம் போன்ற செரிமான அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். எனவே சீரான செரிமானத்திற்கு இவை இரண்டையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளலாம்
கீரையுடன்
கீரை, வெள்ளரிக்காய் மிகக் குறைந்த வேதியியல் பொருந்தக்கூடிய தன்மையைக் கொண்டதாகும். இவை இரண்டையும் ஒன்றாக இணைப்பது உடலில் வைட்டமின் சி உறிஞ்சுதலைத் தடுக்கிறது. இதை ஒன்றாக சாப்பிடுவது தேவையான ஊட்டச்சத்து வேலைக்கு எதிராகவும் செயல்படலாம்
சிட்ரஸ் பழங்களுடன்
வெள்ளரிக்காய்களை ஆரஞ்சு அல்லது எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களுடன் சாப்பிடுவதால், அமிலம் வெள்ளரியை மென்மையாக்கி மொறுமொறுப்புத் தன்மையை கெடுத்து விடலாம்
இறைச்சியுடன் வெள்ளரி
இறைச்சி செரிமானம் செய்ய கடினமாக இருக்கும். அதே சமயம், வெள்ளரி லேசானது மற்றும் நீர்ச்சத்து கொண்டதாகும். இதை ஒன்றிணைத்து சாப்பிடுவது வீக்கம், அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். செரிமான மேம்பாட்டிற்கு இவை இரண்டையும் தனித்தனி உணவுகளில் சேர்த்து முயற்சிக்கலாம்