மன அழுத்தத்தில் இருக்கும் போது இதை சாப்பிடுங்க.. ரிலாக்ஸ் ஆகிடுவீங்க!
பெர்ரி
ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் அவுரிநெல்லி போன்ற பெர்ரி வகைகளில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின், உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவும். மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள், மன அழுத்தத்தின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
நட்ஸ்
பாதாம், முந்திரி போன்ற நட்ஸில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் மெக்னீசியம் உள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
தயிர்
தயிரில் உள்ள புரோபயாடிக் உங்களை மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் குறையும்.
மீன்
மத்தி, சால்மன் போன்ற ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன்கள், உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் உங்கள் மன அழுத்தத்தை குறைத்தாலும், நீங்கள் புதிதாக உணவு வழக்கத்தை மாற்றும் முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.