பார்வைத்திறனை மேம்படுத்த உதவும் உணவுகள்!!

By Devaki Jeganathan
02 Oct 2024, 22:44 IST

உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான உறுப்பாக கண் உள்ளது. இதன் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. இவை கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். கேரட்டில் உள்ள ரோடாப்சின் புரதம் கண் ஆரோக்கியத்திற்கு உதவும்.

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை, ஆரஞ்சு, பம்பளிமாஸ் போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதில் உள்ள வைட்டமின் C, E மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியமான கண் பார்வைக்கு உதவும்.

முட்டை

லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் சிறந்த மூலமாக முட்டை உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் துத்தநாகம் ஆரோக்ககியமான கண் மற்றும் கண்பார்வைக்கு உதவுகிறது.

விதை வகைகள்

சியா விதை, ஆளி விதை, பூசணி விதைகள் போன்ற விதை வகைகளில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. இவை கண்பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மீன்

ஆரோக்கியமான கண்கள் மற்றும் நல்ல கண் பார்வைக்கு மீன் மிகவும் நல்லது. குறிப்பாக இதில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நமது கண்களுக்கு மிகவும் நல்லது. சிறந்த பார்வை திறனை கொடுக்கும்.

சிவப்பு இறைச்சி

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை சிவப்பு இறைச்சி ஆகும். இந்த இறைச்சியில் உள்ள புரதங்கள் கண்பார்வைக்கு உதவுகிறது. அத்துடன் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

நட்ஸ்

பிஸ்தா, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த மூலங்கள். இது, ஆரோக்கியமான கண்கள் மற்றும் கண் பார்வைக்கு உதவும்.