முட்டையைத் தவிர அதிக புரதம் உள்ள உணவுகள் எது தெரியுமா?

By Gowthami Subramani
12 Sep 2024, 08:53 IST

முட்டையைத் தவிர சில உணவுகள் அதிக புரோட்டீன்களைக் கொண்டுள்ளது. இதில் முட்டையைத் தவிர அதிக புரோட்டீன் கொண்ட உணவுகளைக் காணலாம்

பாதாம்

பாதாமில் மக்னீசியம் நிறைந்துள்ளது. இது இதயத்திற்கு ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளின் நல்ல மூலமாக அமைகிறது. கால் கப் பாதாமில் 8 கிராம் பாதாம் உள்ளதாகக் கூறப்படுகிறது

கொண்டைக்கடலை

ஒரு கப் கொண்டைக்கடலையில் 40 கிராம் புரோட்டீன் உள்ளது. இது கிட்டத்தட்ட ஆறு முட்டைகளுக்கு மேல் உள்ள புரதங்களுக்கு சமமாகும்

பருப்பு

இது அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பு இழப்புக்கு உதவக்கூடியதாகும். ஒரு கப் சமைத்த பருப்பில் சுமார் 14-16 கிராம் புரோட்டீன்கள் உள்ளது

குயினோவா

இது ஒரு முழுமையான புரத வகையைச் சேர்ந்ததாகும். இதில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன. ஒரு கப் சமைத்த குயினோவாவில் 8 கிராம் புரதம் உள்ளதாகக் கூறப்படுகிறது

பூசணி விதைகள்

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் 28 கிராம் பூசணி விதையில் 9 கிராம் புரோட்டீன்கள் நிறைந்துள்ளது

கிரேக்க தயிர்

7 அவுன்ஸ் கிரேக்க தயிரில் 20 கிராம் புரதம் நிறைந்துள்ளது. கிரேக்க தயிரிலும் புரோபயாடிக்குகள் அதிகளவு உள்ளது