பீட்ரூட் ஆனது இரும்புச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்று என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனினும், பீட்ரூட்டைத் தவிர இன்னும் சில உணவுகள் அதிக இரும்புச்சத்து நிறைந்ததாகும். இதில் அதிக இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் சிலவற்றைக் காண்போம்
பருப்பு
பீட்ரூட்டை விட நான்கு மடங்கு இரும்புச்சத்து கொண்டதாக பருப்பு அமைகிறது. இதனை உட்கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கலாம்
பூசணி விதைகள்
பீட்ரூட்டின் இரும்புச்சத்தை விட பூசணி விதைகள் 10 மடங்கு அதிகமான இரும்புச்சத்தை கொண்டிருக்கிறது
கொண்டைக்கடலை
இதில் பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்தை விட மூன்று மடங்கு அதிகமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதை சாலட்கள் அல்லது சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்
கீரை
பீட்ரூட்டின் இரும்பை விட கீரையானது மூன்று மடங்குக்கு மேல் இரும்புச்சத்துக்களை வழங்குகிறது. இதை சாலட்கள், ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் ஆனது பீட்ரூட்டில் இருப்பதை விட கிட்டத்தட்ட 15 மடங்கு இரும்புச்சத்தை வழங்குகிறது. இது ஒரு சுவையான வழியாகும்