சில உணவுகளை வேகவைக்கும் போது அது அதிக ஊட்டச்சத்து மிக்கதாக மாறுகிறது. இதில் சமைக்கும் போது அதிக ஊட்டச்சத்துக்களைத் தரும் உணவுகளைக் காணலாம்
கீரை
கீரையை வேகவைத்து சாப்பிடும் போது அதில் இரும்புச்சத்துக்கள், ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஏ போன்றவை நிறைந்து காணப்படுகிறது
கேரட்
வேகவைத்த கேரட் ஆனது அதன் பீட்டா கரோட்டின் உள்ளடக்கத்தை பாதுகாக்கிறது, இதன் மூலம், உடலுக்கு வைட்டமின் ஏ தயாரிக்க அவசியமாகிறது
முட்டை
வேகவைத்த முட்டையில் அதிகளவிலான புரதம் மற்றும் குறைந்தளவிலான கொழுப்புச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது
கொண்டைக்கடலை
வேகவைத்த கொண்டைக்கடலையில் அதிகளவிலான புரச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதை சமைத்து உண்பதன் மூலம் ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்
ப்ரோக்கோலி
இதனைக் கொதிக்க வைப்பதன் மூலம் இதிலிருந்து வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்களைப் பெற முடியும்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேக வைக்கும் போது அதில் உள்ள வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை பாதுகாக்கப்படுகிறது