வைட்டமின் கே உடலுக்கு ஏன் முக்கியம். இதை சரிசெய்ய உதவும் உணவு வகைகளை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
எலும்புகளை வலுப்படுத்த வைட்டமின் கே உதவுகின்றன. உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும். வைட்டமின் கே நிறைந்த சில உணவுகளைக் காணலாம்.
பச்சை காய்கறிகள்
வைட்டமின் கே நிறைந்த உணவு வகைகளில் காய்கறிகளைச் சாப்பிடுவது மிக முக்கிய மற்றும் சிறந்த வழியாகும்.
பால் பொருள்கள் (சீஸ்)
பாலாடைக்கட்டியில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இது செயலாக்கத்தின் நிலை மற்றும் கொழுப்பு உள்ளடக்கத்தைப் பொறுத்து மாறுபடுகிறது.
சோயாபீன்ஸ்
வைட்டமின் கே நிறைந்த ஆதாரங்களில் சோயாபீன்ஸூம் உள்ளது. சோயாபீன்ஸ் எண்ணெயை விட சோயாபீன்ஸை அதிகமாக பயன்படுத்தலாம்.
முந்திரி
முந்திரியில் அவுன்ஸ் ஒன்றுக்கு 9.6mcg அளவிலான வைட்டமின் கே உள்ளது. முந்திரிகளை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் கே சத்துகளைப் பெற முடியும்.