ஸ்ட்ரோக் வருவதைக் குறைக்கும் சூப்பர் உணவுகள் இதோ!

By Gowthami Subramani
24 Oct 2024, 18:24 IST

பக்கவாதம் ஏற்படுவதற்கு உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்றவை முக்கிய காரணமாக அமைகிறது. சில ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்

ஓட்ஸ்

ஓட்மீல் பக்கவாதத்தைத் தடுக்கும் உணவாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்களை எடுத்துக் கொள்வது பக்கவாதத்தைக் குறைக்க உதவுகிறது

உலர் பீன்ஸ்

உலர் பீன்ஸ் உட்பட பெரும்பாலான பருப்பு வகைகள், ப்ரீபயாடிக்குகளின் சிறந்த ஆதாரங்களாகும். இவை பக்கவாதத்தைத் தடுக்கவும், பக்கவாதத்திலிருந்து மீள்வதற்கான மூளையின் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது

தயிர்

குடல் மூளையுடன் தொடர்பு கொள்ளும் பாதையைக் கொண்டுள்ளது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். எனவே தயிர் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உட்கொள்வது பக்கவாதத்தைக் குறைக்கிறது

ஆளி விதைகள்

மூளை சரியாக செயல்படுவதற்கு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் தேவைப்படுகிறது. பக்கவாதத்தைத் தடுக்க உதவும் ஒமேகா-3 நிறைந்த உணவுகளிலிருந்து அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைப் பெறலாம்

வெங்காயம்

இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் நிறைந்ததாகும். இவை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

சிவப்பு ஒயின்

ரெஸ்வெராட்ரோல் என்பது சிவப்பு திராட்சைகளில் காணப்படும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது பக்கவாதம் ஏற்படுவதற்கான குறைந்த அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது