குளிர் காலத்தில் எதுவும் செய்யாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை உங்கள் வழக்கத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.
கீரை
கீரையில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகளை தீர்க்கும். மேலும் இது அதிக பசியை கட்டுப்படுத்தும். இதனால் எடை கட்டுக்குள் இருக்கும்.
கொய்யா
கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கேரட்
கேரட்டில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளன. மேலும் இதில் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. இது உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதுடன், உங்கள் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆரஞ்சு
வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக திகழும் ஆரஞ்சு பழம், கொழுப்பை எரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடையை குறைக்க உதவுகிறது.
மாதுளை
மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடையை குறைக்க உதவுகிறது.