கார்டிசோல் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள்

By Gowthami Subramani
20 Jan 2025, 21:30 IST

கார்டிசோல் ஹார்மோன் என்பது மன அழுத்த ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். இதில் கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளைக் காணலாம்

பூண்டு

பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது கார்டிசோலைக் கட்டுப்படுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது

வாழைப்பழம்

இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இவை இரண்டுமே அட்ரீனல் செயல்பாட்டை ஆதரிக்கிறது. இவை கார்டிசோல் விளைவைக் குறைக்கிறது

சாக்லேட்

அதிக கோகோ உள்ளடக்கம் காரணமாக டார்க் சாக்லேட் கார்டிசோல் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே சமயம், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகிறது

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், வால்நட்ஸ் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றில் மக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை இரண்டுமே கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

இலை கீரைகள்

கீரை மற்றும் காலே போன்ற இலை கீரைகளில் மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது கார்டிசோலைக் குறைத்து மனதை அமைதியாக வைக்க உதவுகிறது

ஆலிவ் எண்ணெய்

இது ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகும். இது வீக்கத்தைக் குறைக்கவும் கார்டிசோல் அளவை நிர்வகிக்கவும் உதவுகிறது

கிரீன் டீ

கிரீன் டீயில் கேட்டசின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இவை சோலைக் குறைத்து தளர்வை ஊக்குவிக்க உதவுகிறது

மட்சா

இந்த பச்சை தேயிலை பவுடரில் எல்-தியானைன் என்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இது கார்டிசோல் அளவை சமநிலைப்படுத்தும் போது தளர்வை ஊக்குவிக்கிறது