தாங்க முடியாத முழங்கால் வலியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க

By Gowthami Subramani
27 May 2024, 22:16 IST

முழங்கால் வலி என்பது கீல்வாதம் போன்ற தேய்மானத்தால் ஏற்படும் வலியாகும். இதில் முழங்கால் வலி நிவாரணத்திற்கு உதவும் சிறந்த உணவுகளைக் காணலாம்

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் கலவைகள் உள்ளது. இவை அழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இவை மூட்டு வலி அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

சால்மன்

இதில் அதிகளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க வழிவகுக்கிறது

பெர்ரி

பெர்ரியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இதில் வலியைக் குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது

இலை கீரைகள்

இலை கீரைகளில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை ஆகும். இது மூட்டு வலி ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

நட்ஸ் மற்றும் விதைகள்

இதில் வீக்கத்தைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது

இஞ்சி

இஞ்சியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இந்த பண்புகள் முழங்கால் வலியைப் போக்க உதவுகிறது

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் இப்யூபுரூஃபனைப் போன்ற அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்ட ஓலியோகாந்தல் நிறைந்துள்ளது. இவை முழங்கால் வலியைக் குறைக்கிறது