டிமென்ஷியா நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் இது தான்!

By Gowthami Subramani
16 May 2024, 13:30 IST

டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்

இந்த நோயானது உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணிகளால் ஏற்படலாம். இதில் நல்ல ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது வயதாகும்போது டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

பெர்ரி

ப்ளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற செர்ரிகளில் அந்தோசயினின் போன்ற ஃபிளவனாய்டுகள் உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் தூண்டப்படும் மூளை பாதிப்பினைத் தவிர்க்கிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஆளி விதைகள், ஆலிவ் எண்ணெய், சால்மன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்வது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது டிமென்ஷியாவை எதிர்த்துப் போராடவும், நல்ல மூளை ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

விதைகள்

ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றில் வைட்டமின் ஈ, துத்தநாகம், ஒமேகா -3 போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த விதைகள் அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறைக்க உதவுகிறது

சிலுவை காய்கறிகள்

காலிஃபிளவர், ப்ரோக்கோலி போன்ற சிலுவை காய்கறிகளில் கரோட்டினாய்டுகள், வைட்டமின்கள் பி போன்றவை நிறைந்துள்ளது. இவை அறிவாற்றல் குறைவு, டிமென்ஷியா மற்றும் மூளைச்சிதைவு போன்றவற்றிற்கு உதவுகிறது

நட்ஸ்

முந்திரி, பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் வேர்க்கடலை போன்றவற்றில் மெக்னீசியம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் பி, ஈ போன்றவை உள்ளது. இவை நல்ல அறிவாற்றலை ஊக்குவிக்கவும், டிமென்ஷியா அறிகுறிகளைத் தடுக்கவும் உதவுகிறது

மசாலா வகைகள்

சீரகம், இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருள்கள் மிகவும் சுவையானதாகும். இதில் நிறைய பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இவை மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலுக்கு பல நன்மைகளைத் தருகிறது

இலை கீரைகள்

கேல், கோலார்ட் கீரை போன்றவை ஃபோலேட், வைட்டமின் பி9 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களைக் கொண்டுள்ளது. இவை மனச்சோர்வைக் குறைத்து அறிவாற்றலை அதிகரிக்க உதவுகிறது