உங்களுக்கு செரிமான பிரச்னைகள் இருந்தால், உங்களின் ஜீரண சக்தியை மேம்படுத்த சில உணவுகளை தினமும் எடுத்துக்கொண்டால் போதும்.
இஞ்சி
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் செரிமான அமிலத்தை தூண்டி, எளிதில் ஜீரணமாக உதவுகிறது.
லவங்கம்
தினசரி உணவில் லவங்கம் சேர்த்து வந்தால் செரிமானம் மேம்படும். இது வாய்வு பிரச்னைக்கு தீர்வு தருகிறது.
சீரகம்
சீரகத்தில் கால்சியம், வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இவை செரிமானத்தை எளிதாக்கும்.
கிரீன் டீ
கிரீன் டீயில் உள்ள பாலிபீனால் உங்கள் ஜீரணத்தை எளிதாக்க உதவுகிறது.
ஓமம்
ஓமத்தில் உள்ள தைமோல் செரிமான அமிலத்தை தூண்டுகிறது. இதனால் செரிமானம் எளிதாகிறது.