சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய உணவு வகைகளைக் காணலாம்
நார்ச்சத்துக்கள்
அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே அன்றாட உணவில் ராஸ்பெர்ரி, பட்டாணி, பருப்பு, கருப்பு பீன்ஸ், ப்ரோகோலி போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்
முழு தானியங்கள்
அரிசி, ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்களை உட்கொள்வது நுரையீரல் செயல்பாடு குறைவதைத் தடுக்க உதவுகிறது
புரதம்
மார்பு தசைகள் உட்பட தசைகளை வலுவாக வைத்திருக்க புரதம் உதவுகிறது. இறைச்சி, மீன், கோழி, முட்டை, சீஸ், நட்ஸ் போன்ற புரதம் நிறைந்த ஆதாரங்களை எடுத்துக் கொள்ளலாம்
நல்ல கொழுப்புகள்
நட்ஸ், ஆலிவ் எண்ணெய், விதைகள் மற்றும் வெண்ணெய் போன்றவற்றில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது
பழங்கள் மற்றும் காய்கறிகள்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகளை உட்கொள்வது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது. மேலும், இதன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது