உயர் இரத்த அழுத்த நோயாளிகள் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் இரவில் என்ன சாப்பிட வேண்டும் என்று இங்கே காண்போம்.
தவறான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், உடலின் இரத்த அழுத்தம் வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. இத்தகைய சூழ்நிலையில், உயர் இரத்த அழுத்த நோயாளிகள் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இரவில் தர்பூசணி, வெள்ளரி, தேங்காய் தண்ணீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
தேங்காய் தண்ணீர்
உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இரவு அல்லது மாலை வேளைகளில் தேங்காய் நீரை உட்கொள்ளலாம். தேங்காய் நீர் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.
வெள்ளரிக்காய்
உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வெள்ளரி சாப்பிடுவது நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவும் கட்டுக்குள் இருக்கும். இது மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.
தர்பூசணி
உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தர்பூசணி சாப்பிடுவது நன்மை பயக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தர்பூசணியில் வைட்டமின்-சி, வைட்டமின்-ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன.
பச்சை காய்கறிகள்
பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும், இது மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிடுவது இதயத்திற்கு நன்மை பயக்கும். இதனை உட்கொள்வதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும், செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.